வரும் 7ம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8ம் தேதிக்குள் புயலாக வழுபெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைக்குள் மேற்கில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளது. டிசம்பர் 8க்குள் புயலாக வலுபெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று காலை 5:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நாளைக்குள் மேற்கில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து வரும் 8ம் தேதி அதே திசையில் நகர்ந்து புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் வறண்ட காற்றின் தாக்கத்தால், கரையை நெருங்கி வலுவிழக்கவும் வாய்ப்பு உள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகர்க்கூடும் என்பதால் வரும் 7ம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் 8,9 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
இது புயலாக உருவானால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் முதல் புயல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post