விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசிக் கட்டத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பே தட்டிக் கொடுத்த பந்தை, சக வீரர் ஆலிவர் ஜிரவுடு கோல் அடித்து அசத்தினார். 74-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பெலி கடத்திக் கொடுத்த பந்தை, எம்பாப்பே மின்னல் வேகத்தில் போலந்து கோல்கம்பத்திற்குள் தள்ளி, அரங்கத்தை அதிர வைத்தார்.
பிரதான நேரமான 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் வழங்கப்படும் இன்ஜூரி நேரத்தில், எம்பாப்பே மேலும் ஒரு கோல் அடித்து, பிரான்ஸ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திளைக்க வைத்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் போலந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அந்த அணியின் லேவண்டோஸ்கி கோலாக மாற்றி, ஆறுதல் அளித்தார். முடிவில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48வது நிமிடத்தில் ஹாரி கேனும், 57வது நிமிடத்தில் புகாயோ சகாவும் கோல் அடித்தனர். செனகல் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில், இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Discussion about this post