பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.கவின் எரிபொருள் கொள்ளையே காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு துவக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.100க்கு மேல் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டது.இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மேலும் மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்த விலை ஏற்றத்திற்கு எல்லாம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றமே காரணம் என மோடி அரசாங்கம் கூறியது. ஆனால், கடந்த 10 மாதங்களாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 25% வரை குறைந்துள்ளது. ஆனால் மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், “கடந்த 6 மாதங்களில் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 25% வரை குறைந்துள்ளது. ஆனால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு ரூபாயைக் கூட குறைக்கவில்லை” என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
Discussion about this post