புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அவசரத் தேவைக்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து வெளி மாநிலத்துக்குச் செல்வதற்கோ, வேறு மாநிலத்தில் இருந்து புதுச்சேரி வருவதற்கோ இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Discussion about this post