கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்ற முதற்கட்ட தேர்தலில், 67.2 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கடந்த தேர்தலை விட இம்முறை 4 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.
குஜராத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற முதற்கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது, தெற்கு குஜராத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 70 பெண்கள் உள்பட 788 பேர் பேட்டியிடுகின்றனர்.
2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வசதியாக 25,434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 34,324 வாக்குப்பதிவு எந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகள், 38,749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 2, 20,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நேற்று முதற்கட்டமாக 89 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 62.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்ற முதற்கட்ட தேர்தலில், 67.2 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கடந்த தேர்தலை விட இம்முறை 4 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக டெடியபாடா தொகுதியில் 81.34 சதவீத வாக்குகளும், நிஜாரில் 77.87 சதவீதமும், ஜகாடியாவில் 77.65 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 93 தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
Discussion about this post