news.திராவிடன்
Advertisement
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
news.திராவிடன்
No Result
View All Result
Home அரசியல்களம்

தேர்தலுக்கு ரெடியான மோடி! பிரணாய் ராய் விலகல் ஏன்?

பிரணாய் ராயும், அவரது மனைவி ராதிகா ராயும் இயக்குநர் பதவியை ராஜினாமா?

மாறா கார்த்திக் by மாறா கார்த்திக்
December 1, 2022
in அரசியல்களம், உலக செய்திகள்
20 0
0
pranai
10
SHARES
45
VIEWS
WhatsappFacebook

என்டிடிவி நிறுவனர்களான பிரணாய் ராயும், அவரது மனைவி ராதிகா ராயும் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளது ஊடக, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. அந்நிறுவனத்தின் நிறுவனர்களான பிரணாய் ராயும், அவரது மனைவி ராதிகா ராயும் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களது ராஜினாமா முடிவுக்கு வாரியக் கூட்டம் ஒப்புதல் அளித்ததையும், புதிய இயக்குநர்கள் நியமனம் செய்யப்பட்ட தகவலையும் பங்குச் சந்தையில் என்டிடிவி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகவும் நம்பகத்தகுந்த செய்திகளை வழங்கி, பல்வேறு பிரேக்கிங் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த என்டிடிவி-க்கு பிரணாய் ராய், ராதிகா ராயின் ராஜினாமா செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக அமைந்துள்ளது. New Delhi Television Ltd (NDTV) என்டிடிவி, 1984ஆம் ஆண்டில் சர்வதேச செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் ஆகியவற்றிற்கான தயாரிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்டது. பிரணாய் ராயும், அவரது மனைவி ராதிகா ராயும் அந்நிறுவனத்தின் நிறுவனர்களாக செயல்பட்டு வந்தனர்.

அதானி குழுமத்துக்கு கைமாறிய பின்னணி

என்டிடிவி-க்கு நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களுக்கு உதவ பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோரால் உருவாக்கப்பட்ட என்டிடிவி புரமோட்டரான ஆர்ஆர்பிஆர் (RRPR) நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகள் பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோர் வசம் இருந்தன. அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் அவர்கள் இயக்குநர்களாக இருந்து வந்தனர். இந்த நிறுவனம், விபிசிஎல் (VPCL) நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்காக 2009-10ஆம் ஆண்டில் கடன் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, வட்டியில்லாமல், 29.18 % பங்குகளை அடமானமாக வைத்து VCPL நிறுவனத்திடம் இருந்து ரூ.403 கோடியை RRPR நிறுவனம் கடனாக வாங்கியது.

VCPL நிறுவனத்திடம் வாங்கிய ரூ.403 கோடி கடனை பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் திருப்பி தரவில்லை எனில், VCPL நிறுவனம் RRPR நிறுவனத்திடம் இருக்கும் 29.18 சதவீத NDTV பங்குகளை தன் பெயரில் மாற்றிக்கொள்ளும் வகையில் ( warrant) பற்றாணை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, வாங்கிய கடனை செலுத்தாததை அடுத்து, என்டிடிவி நிறுவனத்தின் புரமோட்டரான RRPR பங்குகளை VCPL நிறுவனம் கைப்பற்றியது.

விபிசிஎல் நிறுவனம் முழுக்க முழுக்க அதானி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனமாகும். அதானி குழுமத்தின் மீடியாத்துறை கிளையான AMG மீடியா நெட்வொர்க் VCPL நிறுவனத்தை முழுமையாக அண்மையில் வாங்கியது. இந்த பின்னணியில், RRPR பங்குகளை கைப்பற்றிய VCPL நிறுவனம் அதனை அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக தெரிவித்தது. அதன்படி, அதானி நிறுவனத்திடம் என்டிடிவி நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகள் வந்துள்ளன.

இதுதவிர, கூடுதலாக திறந்தவெளி சந்தையில் Open offer வாயிலாக 26% பங்குகளை வாங்குவதற்கு அதானி நிறுவனம் முயற்சித்து வருகிறது. அந்தவகையில், என்டிடிவி நிறுவனத்தில் அதானி குழுமத்தின் பங்கு 55.18% ஆக அதிகரிக்கும். இதன் விளைவாக என்டிடிவி மொத்தமாக அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரும். இந்த நிலையில்தான், என்டிடிவி நிறுவனர்களான பிரணாய் ராயும், அவரது மனைவி ராதிகா ராயும் என்டிடிவி புரமோட்டர் நிறுவனமான ஆர்ஆர்பிஆர் (RRPR) நிர்வாகக் குழுவில் இருந்து இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எனினும், என்டிடிவியின் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்துள்ளனர்.

பிரணாய் ராய்க்கு அழைப்பு விடுத்த அதானி

இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து மீடியாக்களும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் பின்புலம் கொண்ட தொழிலதிபர்களால் இயக்கப்பட்டு வரும் நிலையில், என்டிடிவி மட்டுமே தனித்து இயங்கி வந்தது. இதனால், அந்த நிறுவனத்தால் சார்பற்ற செய்திகளை வழங்கவும் முடிந்தது. தேர்தல் கருத்துக் கணிப்புகளில் முன்னோடியான, நாட்டின் மூத்த பத்திரிகையாளர் பிரணாய் ராய் தலைமையில், இந்தியாவின் முதல் சுதந்திரமான செய்தி நெட்வொர்க்காவும் NDTV இயங்கி வந்தது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் பங்குகளை அதானி கைப்பற்றியது பல்வேறு விவாதங்களை எழுப்பியது.

அதேசமயம், என்டிடிவி நிறுவனத்தை பொறுப்புக்காக வாங்கியுள்ளதாகவும், தொழிலுக்காக வாங்கவில்லை எனவும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். மேலும், என்டிடிவி தலைவராக பிரணாய் ராய் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் அதானி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அந்த அழைப்பை அவர் ஏற்க மறுத்ததே இந்த ராஜினாமா செய்தி சுட்டிக்காட்டுகிறது.

அடுத்து என்ன பிரணாய் ராய்

‘நாங்கள் ஊடகவியலாளர்கள் நாட்டில் மிக முக்கியமான நபர்களாக இல்லாமல் இருக்கலாம் – நாங்கள் நிச்சயமாக மிகவும் சுய முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்; Prannoy, it’s not time to pack up – நீங்கள் இன்னும் எதையும் பார்க்கவில்லை’ இவை வாழ்நாள் சாதனையாளர் விருதை இரண்டாம் முறையாக வாங்கியபோது பிரணாய் ராய் உதிர்த்த வார்த்தைகள். எனவே, இந்தியாவின் முதல் 24×7 செய்தி சேனலைத் தொடங்கிய பெருமைக்குரிய பிரணாய் ராயின் சகாப்தம் இதோடு முடிவடையாது என்கிறார்கள். நடுநிலை வாய்ந்த செய்திகளை நாட்டுக்கு வழங்க பிரணாய் ராய்க்கள் அவசியம் என்கிற குரல்கள் ஊடக உலகில் கேட்கின்றன.

தேர்தலுக்கு தயாரான மோடி

உலகப் பணக்கார தொழிலதிபர்களான அம்பானி, அதானி ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருவதாகவும், அவர்களுக்காக ஏராளமான சலுகைகளை மத்திய பாஜக அரசு வழங்கி வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே நெட்வொர்க்-18 அம்பானி வசம் உள்ள நிலையில், என்டிடிவி முழுமையாக அதானியின் வசம் சென்றுள்ளது. இந்தியாவின் இரண்டு முக்கிய ஊடக நிறுவனங்கள் தற்போது பாஜக ஆதரவு இரண்டு தொழிலதிபர்கள் வசம் சென்றுள்ளது. இது எதிர்வரவுள்ள 2024ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பாஜகவுக்கு உதவிகரமாக இருக்கும் என்ற விவாதங்கள் நாடு முழுவதும் எழ்ந்துள்ளன.

ஏற்கனவே இரண்டு முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ள பாஜக, இந்த முறையும் ஆட்சிக்கட்டிலை அலங்கரிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எதிர்வரவுள்ள 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார். இதற்கான பணிகளை இப்போதே பாஜக முடுக்கி விட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்து விட்டதால் வழக்கமாக மக்களிடம் ஏற்படும் அதிருப்தியை இந்த முறை பாஜக சமாளிக்க வேண்டியுள்ளது. அதற்கு அம்பானியும், அதானியும் ஊடகங்கள் வாயிலாக உதவுவார்கள் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Tags: AmbaniElectionModiPranaiquitRadhika Roy
Previous Post

சரியும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை! அதிகரிக்கும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை!

Next Post

பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை!

Related Posts

muslim
உலக செய்திகள்

15 வயதைக் கடந்த இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா?

by மாறா கார்த்திக்
January 14, 2023
45
EASTER
அரசியல்களம்

இலங்கை ஈஸ்டா் தின குண்டுவெடிப்பு!

by மாறா கார்த்திக்
January 13, 2023
43
Annamalai
அரசியல்களம்

அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு!

by மாறா கார்த்திக்
January 13, 2023
40
ramsetu
அரசியல்களம்

“ராமர் என்ன கதாபாத்திரமா? அவர் அவதாரபுருஷர்!

by மாறா கார்த்திக்
January 12, 2023
40
DMK
அரசியல்களம்

குடியரசு தலைவரை சந்தித்த திமுக பிரதிநிதிகள்!

by மாறா கார்த்திக்
January 12, 2023
36
Next Post
kliyopatraa

பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை!

Discussion about this post

Premium Content

ஹிட்லரின் வாழ்க்கையில் நாம் அறியாத பக்கம்!

ஹிட்லரின் வாழ்க்கையில் நாம் அறியாத பக்கம்!

December 3, 2022
87

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!

December 12, 2022
35
annamalai

5,000 இடங்களில் ‘நான் ஸ்டாப்’ போராட்டம்!

November 28, 2022
34

Hook Up on Tinder

March 15, 2023
39
UP TTE

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது !

January 23, 2023
43
ration

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்!

January 20, 2023
40
Word_Tamil

நமக்கு தெரியாத மொழியின் அர்த்தங்கள்!

January 20, 2023
52
A,R,FilmCity

ஏஆர் ரஹ்மான் பிலிம் சிட்டியில் விபத்து!

January 18, 2023
36
vande-bharath

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

January 18, 2023
35
Facebook
news.திராவிடன்

தமிழ் தாழ் திறப்போம், ஓர் புதிய கண்ணோட்டத்தில்

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00

Queue

Update Required Flash plugin
-
00:00
00:00