தமிழ்நாடு மின்சார வாரியம் மின் பயனர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் சேர்க்கத்தொடங்கிவிட்டது. கட்டாயம் இந்த இரண்டையும் இணைக்கவேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இது இணைக்கப்படவில்லை என்றால் மின் சலுகை கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மின் பயனர்கள் அனைவரும் அவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும். பயனர்கள் இதை நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம்.
இதற்கு அவர்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிடவேண்டும். இதை ஆன்லைன் மூலமாக அல்லது நேரடியாக பில் செலுத்தும்போதும் நீங்கள் பதிவிடலாம்
முதலில் நீங்கள் தமிழக மின்வாரியத்தில் அதிகாரபூர்வ இணையதளமான www.tneb.gov.in செல்ல வேண்டும்.
அங்கு Consumer info அல்லது நுகர்வோர் தகவல் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவேண்டும்.
பின்னர் நீங்கள் உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவிடவேண்டும்.
கிழே நீங்கள் உரிமையாளரா? அல்லது வாடகைக்கு குடி இருப்பவரா? என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் நீங்கள் எதுவோ அதை கிளிக் செய்து பின்னர் உள்ளே செல்லவும்.
அங்கு உங்களின் ஆதார் எண், ஆதார் அட்டையில் இருப்பது போன்ற பெயர் மற்றும் அடையாள அட்டையின் புகை படம் என மூன்று கேட்கப்படும்.
அடையாள அட்டையின் புகைப்படம் 500KB அளவிற்கும் குறைவாக இருக்கவேண்டும்.
இதனால் உங்களின் ஆதார் புகை படத்தை எடுத்த பின் புகை படத்தின் அளவை 500KB கீழ் சிறிதாக்கி பதிவிடவும்.
இதற்கு Google Play Store பல செயலிகள் வைத்துள்ளது. அவற்றை பயன்படுத்தி நீங்கள் உங்களின் படத்தை சிறிதாக்கலாம்.
பின்னர் OK கிளிக் செய்தால் உங்கள் ஆதார் எண் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும்.
Discussion about this post