news.திராவிடன்
Advertisement
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
news.திராவிடன்
No Result
View All Result
Home விளையாட்டு

FIFA World Cup-ல் வெடித்த கலவரம்!

ஆத்திரத்தில் ஈரான் நடந்தது என்ன?

மாறா கார்த்திக் by மாறா கார்த்திக்
November 29, 2022
in விளையாட்டு
15 0
0
america
7
SHARES
34
VIEWS
WhatsappFacebook

கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. போட்டிகளுக்கு மத்தியில் ரசிகர்களின் ஆரவாரமும், கொண்டாட்டமும் களைகட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் கத்தார் புறப்பட்டு சென்று தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் மகிழ்ச்சியுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

ஈரான் vs அமெரிக்கா

இந்திய நேரப்படி இன்று (நவம்பர் 29) நள்ளிரவு 12.30 மணிக்கு ஈரான், அமெரிக்கா இடையில் லீக் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஆண்கள் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு ஒன்று போடப்பட்டது. அதில், ஈரான் நாட்டு தேசியக் கொடியின் நடுவே ”Allah” என்பதை குறிப்பிடும் தேசிய சின்னத்தை நீக்கிவிட்டு பதிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபிஃபாவிடம் ஈரான் புகார்

இதைக் கவனித்த ஈரான் கால்பந்து கூட்டமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கால்பந்தின் சர்வதேச கூட்டமைப்பான ஃபிஃபாவிடம் (FIFA) புகார் அளித்திருக்கிறது. அமெரிக்க கால்பந்து அணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அணியை நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஈரானின் கொடியில் மாற்றம் செய்து போட்ட பதிவை கத்தாரில் இருக்கும் ஈரான் மற்றும் அமெரிக்க ரசிகர்களும் விரும்பவில்லை.

தேசியக்கொடி சர்ச்சை

சமூக வலைதளங்களில் மிகவும் காரசாரமாக விமர்சனம் செய்து வருகின்றனர். விஷயம் விஸ்வரூபம் எடுப்பதை கவனித்த அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக அந்த கொடியில் மாற்றம் செய்து உண்மையான கொடியை பதிவிட்டு திருத்திக் கொண்டது. இதுதொடர்பாக அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அளித்துள்ள விளக்கத்தில், ஈரான் நாட்டில் மனித உரிமைகளுக்காக பெண்கள் போராடி வருகின்றனர்.

ஹிஜாப் போராட்டம்

கடந்த செப்டம்பர் மாதம் ஈரானில் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம் சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் போலீசார் கைது செய்தனர். அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்தார். ஆனால் இதை போலீசார் மறுத்தனர். இதன் தொடர்ச்சியாக ஈரானில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாப்பை எரித்தும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

பின்வாங்கிய அமெரிக்கா

இந்த விவகாரத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகியது. தற்போதும் ஈரான் நாட்டு பெண்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ஈரான் பெண்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையிலேயே தேசியக் கொடியில் மாற்றம் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் 24 மணி நேரத்திற்குள் அதை மாற்றிவிட்டு, உண்மையான ஈரான் தேசியக் கொடியை பதிவிட்டனர்.

அரசியல் சண்டை

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க கால்பந்து அணியின் பயிற்சியாளர் கிரெக் பெர்ஹால்டர், ஈரான் தேசியக் கொடி சர்ச்சை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இதற்காக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இதில் எங்களின் பங்கும் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் சர்வதேச அரசியல் அரங்கில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பிற்கும் இடையில் சுமூக உறவு கிடையாது. இத்தகைய சூழலில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர்பான பதிவால் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: # Football#WorldNewsAmericaFIFAFIFA2022IranSportsWorldCup
Previous Post

‘ரோஹித் மற்றும் டிராவிட்டிற்கு’ அவசர அழைப்பு விடுத்த பிசிசிஐ!

Next Post

சமந்தாவை திருமணம் செய்வதை தவிர வேறு வழியில்லை!

Related Posts

Volleyball
விளையாட்டு

தேசிய அளவிலான வாலிபால் போட்டிக்கு விழுப்புரம் மாணவி தேர்வு!

by மாறா கார்த்திக்
January 4, 2023
36
hewag-messi
விளையாட்டு

மெஸ்ஸி இந்தியாவில் பிறந்து இருந்தால்!

by Vignesh A
December 20, 2022
36
athlet
விளையாட்டு

நாமக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!

by மாறா கார்த்திக்
December 12, 2022
42
jallikattu
விளையாட்டு

ஜல்லிக்கட்டு போட்டோவை நீட்டிய பீட்டா!

by மாறா கார்த்திக்
December 8, 2022
39
fifa
விளையாட்டு

கால்பந்து உலகக் கோப்பை போலந்து அணியை வெளியேற்றி காலிறுதிக்குள் கால்பதித்த பிரான்ஸ்!

by மாறா கார்த்திக்
December 5, 2022
34
Next Post
naga-chaitanya

சமந்தாவை திருமணம் செய்வதை தவிர வேறு வழியில்லை!

Discussion about this post

Premium Content

DMK-MLAs-meeting-on-Jan-5-at-Arivalayam_

திமுக உட்கட்சி தேத்தலுக்கான வேட்பு மனு தாக்கல்!

September 22, 2022
60
ps-puic

கல்கியின் நாவலுக்கு இணையாக இருக்கிறதா பொன்னியின் செல்வன் படம்?

September 30, 2022
44
Iyappan

இன்று மாலை திறக்கப்படுகிறது கேரள சபரிமலை கோயில் நடை!

November 16, 2022
45
UP TTE

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது !

January 23, 2023
34
ration

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்!

January 20, 2023
34
Word_Tamil

நமக்கு தெரியாத மொழியின் அர்த்தங்கள்!

January 20, 2023
38
A,R,FilmCity

ஏஆர் ரஹ்மான் பிலிம் சிட்டியில் விபத்து!

January 18, 2023
34
vande-bharath

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

January 18, 2023
34
muslim

15 வயதைக் கடந்த இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா?

January 14, 2023
34
Facebook
news.திராவிடன்

தமிழ் தாழ் திறப்போம், ஓர் புதிய கண்ணோட்டத்தில்

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00

Queue

Update Required Flash plugin
-
00:00
00:00