பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ரச்சிதா மகாலட்சிமி பின்னாடியே சுற்றிய ராபர்ட் மாஸ்டருக்கு எத்தனை லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 6 வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டர் நேற்று முன்தினம் இரவு வெளியேற்றப்பட்டார். முதலில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார். அதனால் மிக்சர் மாமா என பெயர் எடுத்தார். திடீர் என்று அவருக்கு ரச்சிதா மகாலட்சுமி மீது ஃபீலிங்ஸ் ஏற்பட்டது. அவர் தன் ஃபீலிங்ஸை டிசைன் டிசைனாக ரச்சிதாவிடம் வெளிப்படுத்தியும் பலன் இல்லை. நீங்க எனக்கு அண்ணன் மாதிரி மாஸ்டர் என்று ஒரே போடாக போட்டார் ரச்சிதா. அப்படியும் அவரை சும்மாவிடவில்லை ராபர்ட்.
50 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் ராபர்ட் மாஸ்டர். அவருக்கு வாரத்திற்கு ரூ. 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம். ஆக 7 வாரங்களுக்கு ரூ. 14 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ராபர்ட் மாஸ்டருக்கு இவ்வளவு அதிகமாக சம்பளம் கிடைக்க அவரின் முன்னாள் காதலியான வனிதா விஜயகுமார் தான் காரணம். அவர் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததும் இல்லாமல், நல்ல சம்பளமும் கிடைக்கும்படி பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்து எந்த டாஸ்கையும் ஒழுங்காக செய்யவில்லை. அடுத்தவர் மனைவி பின்னாடியே சுத்தினார். கடலை போட்டார். இதை பார்த்து ரச்சிதாவின் கணவரான நடிகர் தினேஷ் கோபப்பட்டது தான் மிச்சம். அடுத்தவர் மனைவியின் கையை பிடித்து இழுத்து, முத்தம் கேட்கிறாரே, இந்த ராபர்ட் மாஸ்டரை ஒன்னுமே செய்ய மாட்டீங்களா பிக் பாஸ் என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன் பிறகே அவர் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து வந்ததும் முதல் வேளையாக அசல் கோலாரை சந்தித்து பேசியிருக்கிறார் ராபர்ட் மாஸ்டர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அசல். வனிதாவை பார்த்து மன்னிப்பு கேட்பீர்கள் என எதிர்பார்த்தால் இந்த கோளாறு புடுச்ச அசலை போய் பார்த்திருக்கிறீர்களே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அசல் சகவாசம் வேண்டாம், வேண்டவே வேண்டாம் என ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ரச்சிதா மகாலட்சுமி, மைனா நந்தினி ஆகியோரை நம்பினீர்கள். இருவரும் சேர்ந்து உங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுவிட்டார்கள். அவர்கள் விஷம் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் மாஸ்டர். மேலும் வனிதாவை சந்தித்து கண்டிப்பாக மன்னிப்பு கேளுங்கள் என பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post