பொதுமக்கள் வெளியூர் செல்ல, வெளி மாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்காக மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது எனவும், இதன் விளைவாக பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா.
தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், போக்குவரத்துக்கு எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, தனிநபர் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அதேசமயம் சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post