திருவண்ணாமலையில் பிரசிக்த்தி பெற்ற ஆலயமான அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 5 நாட்களாக தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடத்தப்படும் இந்த தீபத்திருவிழாவினை காண பல நகரங்களில் இருந்து பக்தர்கள் வந்து கண்டுகளித்து இறைவன் அருள் பெற்று செல்வர்.
ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகளும் பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறுகின்றது. கார்த்திகை மாதம் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையிடுகின்றனர்.
இதனையடுத்து அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, அதோடு இரவு தங்க சூரியபிரபை வாஹனம், பஞ்சமூர்த்திகள் இந்திர வாகனத்தின் வீதி உலாவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த திருவிழாவானது டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறும்.
Discussion about this post