காதல் ஜோடியான கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மணிரத்னத்தின் கடல் படம் மூலம் நடிகரானார் கவுதம் கார்த்திக். முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். இதையடுத்து மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அண்மையில் தான் சமூக வலைதளத்தில் தங்கள் காதல் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில் இன்று கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.
திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் கூட்டாக அறிவித்தார்கள். ஆனால் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்காதாம். திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் நடத்தினார்கள், ஜோடியாக மீடியாவை சந்தித்து பேசினார்கள். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் ஏன் இல்லையாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேவராட்டம் படத்தில் நடித்தபோது கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இடையே நல்ல நட்பு இருந்ததாம். அதன் பிறகு நட்பு காதலாகியிருக்கிறது. காதலை இரு வீட்டிலும் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டார்கள். கவுதம் கார்த்திக் தான் காதலை முதலில் சொல்லியிருக்கிறார். அவர் ஐ லவ்யூ சொன்னதுமே லவ் யூ டூ என மஞ்சிமா மோகன் உடனே சொல்லவில்லையாம். இரண்டு நாட்கள் யோசித்துவிட்டு வந்து பதில் அளித்திருக்கிறார். அவர் நல்ல பதில் அளித்ததால் கவுதம் கார்த்திக் சந்தோஷப்பட்டுள்ளார்.
கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனின் திருமண பத்திரிகை தான் பலரையும் கவர்ந்திருக்கிறது. அவர்களின் திருமணத்தை நினைத்து சிம்பு சந்தோஷப்பட்டு வாழ்த்தியதாக கவுதம் கார்த்திக் தெரிவித்தார். சிம்புவின் பத்து தல படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார் கவுதம் கார்த்திக். மேலும் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்படு மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் மஞ்சிமா மோகன் என்பது
கெரியரை பொறுத்தவரை பத்து தல தவிர்த்து 1947 படத்தில நடித்து முடித்திருக்கிறார் கவுதம் கார்த்திக். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். படங்களில் நடிப்பதை நிறுத்த மாட்டேன் என மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். அவர் தற்போது கெரியரில் இருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கிறார்.
Discussion about this post