பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து வார, வாரம் ஒருவரை வெளியே அனுப்புவது வழக்கம் தான். இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் வெளியேறப் போவது யார் என்று கமல்ஹாசன் பேசிய ப்ரொமோ வீடியோ இன்று காலையில் வெளியானது. வழக்கமாக மூன்றாவதாக வரும் வீடியோவை இன்று மட்டும் ஏன் முதல் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். என்ன ஸ்பெஷலாக இருக்கும் என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் கமல் கையில் இருக்கும் கார்டில் யார் பெயர் இருப்பது என்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் மிக்சர் மாமா, கடல மன்னன் என்று பெயர் வாங்கிய ராபர்ட் மாஸ்டர் தான் இன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். எவிக்ஷனுக்காக ராபர்ட் மாஸ்டரின் பெயரை நாமினேட் செய்தவர்களில் ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர். ஏற்கனவே திருமணமான ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு ஃபீலிங். அதை ரச்சிதா ஏற்காதபோதிலும் அவரையே சுற்றி சுற்றி வந்தார். இதை பார்த்து வெளியே இருக்கும் ரச்சிதாவின் கணவர் தினேஷ் கோபப்பட்டார்.
திருமணமான பெண்ணுடன் ராபர்ட் மாஸ்டர் இப்படி இருப்பது சரியில்லை. கள்ளக்காதலை ஊக்குவிக்கிறதா பிக் பாஸ் என்றெல்லாம் பார்வையாளர்கள் பேசத் துவங்கினார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே ராபர்ட் மாஸ்டர் டாஸ்குகளில் பெரிதாக எதையும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது சர்ச்சைக்குரிய போட்டியாளரை ஏன் இன்னும் வெளியே அனுப்பவில்லை என பார்வையாளர்கள் கேட்டு வந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரை கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் காதலியான வனிதா விஜயகுமார் மூலம் தான் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ராபர்ட் மாஸ்டருக்கு கிடைத்தது. நான் அங்கு சென்றதுமே கமல் சார் முன்பே உனக்கு கிரெடிட் கொடுப்பேன் என வனிதாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் வனிதா பற்றி வாய் திறக்கவே இல்லை. வனிதாவும் தான் செய்ததை சொல்லிக்காட்டவில்லை. ஆனால் வனிதா தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் என்கிற உண்மை கசிந்துவிட்டது. அதன் பிறகே வனிதா உண்மையை ஒப்புக் கொண்டார்.
தன் கெரியர் பிக்கப் ஆகும் என்கிற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர். ஆனால் தன் செயலால் பெயரை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம் என்கிறார்கள் பார்வையாளர்கள். இந்த வாரம் தனலட்சுமி வெளியேறுவார் என்று எதிர்பார்த்தோம், பரவாயில்லை. அவரை அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என மேலும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post