மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மும்பையில் உள்ள ஜெயின் கோவில்களை திறக்க அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மும்பையில் உள்ள தாதர், பைகுல்லா மற்றும் செம்பூரில் உள்ள ஜெயின் கோவில்களை ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மக்களின் வழிபாட்டிற்காக திறக்க அனுமதி அளித்தது.
‘இந்த சலுகையானது வேறு எந்த கோவில்களுக்கோ, விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கோ பொருந்தாது. விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு அனுமதி வழங்க முடியாது, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது.
Discussion about this post