ஜெர்மனி – ஜப்பான்
2வது உலக கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலிபா சர்வதேச மைதானத்தில் ‘ஈ’ பிரிவில் நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி– ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணியின் வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
பிறகு, ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதில் கோல் திருப்ப ஜப்பான் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கனக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. ஆனால். ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் ரிஸ்து டோன், 83 நிமிடத்தில் டகுமா ஆசானோ அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து மிரட்டினர். இது ஜெர்மனி அணியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், பதிலடி கொடுக்க முயன்ற அந்த அணியின் முழுமுயற்சியும் தோல்வியில் முடித்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜப்பான் ரசிகர்கள் செயல் :
இந்நிலையில், ஜெர்மனி- ஜப்பான் போட்டியை காண வந்த ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் மைதானத்தில் செய்த செயல் உலக கால்பந்து ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
லிபா சர்வதேச மைதானத்தில் ஜெர்மனி- ஜப்பான் போட்டியை காண வந்த ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், ரசிகர்கள் போட்டுவிட்டு சென்ற பாதைகள், உணவு தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர்.
ஜப்பானின் ரசிகர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வரும் நிலையில், அவர்கள் கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவில் நடந்த 2018 உலகக் கோப்பையில், பெல்ஜியத்திற்கு எதிராக 3-2 ரவுண்ட்-ஆஃப்-16 தோல்வியடைந்த போதிலும், ஜப்பானிய ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post