இந்திய திரையுலகம் கவனிக்கும் வகையில் திரைப்படங்களை கொடுத்து வரும் கன்னடா திரைத்துறையில் வெளியான மேலும் ஒரு தரமான படம் காந்தாரா.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் காந்தாரா திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்திய திரையுலகம் கவனிக்கும் வகையில் திரைப்படங்களை கொடுத்து வரும் கன்னடா திரைத்துறையில் வெளியான மேலும் ஒரு தரமான படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா கிஷோர், அச்சுயூத் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கி இருந்தார்.
கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியானது. அங்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 16 கோடியில் தயாரான இந்த படம் தற்போது 500 கோடி வசூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
விமர்சன ரீதியாகவும், வசூலி ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள காந்தாரா படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து இயக்குனர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டினார். திரையரங்கில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் எப்போது ஒடிடி தளத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்பு நிலவியது.
மேலும் நவம்பர் 4-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்க்பபட்ட நிலையில், காந்தாரா திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதால் ஒடிடி வெளியீடு நவம்பர் 18-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் நவம்பர் 18-ந் தேதியும் வசூல் குறையாததால் நவம்பர் 24-ந் தேதி காந்தாரா படம் நவம்பர் 24-ந் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது காந்தாரா படம் தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ள காந்தாரா படம் திரையரங்கை தாண்டி ஒடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டாலும் திரையரங்கில் காந்தாராவுக்கு வரவேற்பு இன்னும் குறையவில்லை.
Discussion about this post