அட்டகாச சதம் இந்திய அணியின் டாப் ஆர்டரில் இஷான் கிஷான்(Ishan Kishan) 36 ரன்கள், ரிஷப் பண்ட் 6 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா (Hartik Pandiya) 13 ரன்கள் என சொற்ப ரன்களுக்கு வெளியேறினார்கள். ஆனால் மறுமுணையில் ஒற்றையாளாக போராடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை விளாசினார்.
அட்டகாச ரெக்கார்ட் இந்நிலையில் விராட் கோலியின் அட்டகாச ரெக்கார்ட் தகர்க்கப்பட்டது. டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் நேற்று தனது 7வது ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். நட்சத்திர வீரர் விராட் கோலி 6 முறை பெற்றிருந்தார். அதனை முந்தி தான் முதலிடம் பிடித்துள்ளார்.
மற்றொரு வீரர் சூர்யகுமார் யாதவை போலவே ஜிம்பாப்வே அணியின் சிகாந்தர் ராசாவும் 7 முறை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் குறைந்த காலத்திலேயே உலகின் நம்பர் 1 வீரராக திகழ்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். 39 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,395 ரன்களை விளாசியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ரோகித் சர்மா சாதனை இதே போல ரோகித் சர்மாவின் சாதனையையும் சூர்யகுமார் அசால்ட்டாக எட்டியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை விளாசிய ஓரே இந்தியராக ரோகித் சர்மா மட்டுமே இருந்தார். ஆனால் நேற்றைய சதத்தின் மூலம் ரோகித்தை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்.
Discussion about this post