சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மோகன் எழுதியிருக்கும் இந்தப் பாடலையும் இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். லாக்டவுன் காலகட்டத்திலும் ‘டாக்டர்’ படக்குழு தொடர்ந்து இரண்டு பாடல்களை வெளியிட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post