சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் இன்று காலை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முதற்கட்டக் கூட்டத்தில் முதல்வர்
மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சென்னையில் மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் அனைத்திலும் ஒரே பயணச் சீட்டைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயணம் செய்யும் வசதி குறித்து, ஆலோசனை நடந்துள்ளது.
மேலும், மோட்டார் அல்லாத போக்குவரத்து மற்றும் பல்வேறு வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஆலோசனை நடத்தப்படும் என்றும் போக்குவரத்துக் குழுக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை நகருக்குள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. அதேபோல, புறநகர் ரயில் சேவை சென்னையை மையமாக கொண்டு பல மாவட்டங்களில் இயங்கி வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்து வரும் நிலையில், பேருந்திலும், ரயிலிலும் மாறி மாறி பயணம் செய்து வருபவர்களுக்கு இந்த ஒரே பயண சீட்டு பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், டிக்கெட் விலை குறித்தே இந்த சேவை பொதுமக்களுக்கு இனிப்பானதாக அமையும்.
Discussion about this post