தமிழ்நாடு-கேரளா எல்லையில் தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரை 152 அடி உயரம் உள்ள நிலையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க சமீபத்தில், உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும், கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 138 அடியை எட்டியுள்ளது.
இதனால் கேரளா பகுதிகளுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1,542 கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 138 அடியை எட்டியுள்ளது.
இதனால் கேரளா பகுதிகளுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1,542 கன அடி வந்து கொண்டிருக்கிறது. ரூல்கர்வ் விதிப்படி வருகிற 20ம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 141 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்பதால் அதற்கு பின்னர் அணைக்கு வரும் நீர் கேரளா பகுதிக்கு திறந்துவிடப்படும் சூழல் உள்ளது.
இந்த இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையால் கேரளா விவசாயிகள் மற்றும் முல்லைப்பெரியாறு அணையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.
Discussion about this post