கோவை :
கோவை வால்பாறை அருகே பெண் யானை உயிரிழப்பு, யானைகளுக்கு இடையேயான மோதலால் உயிரிழந்ததாக உடற்கூராய்வில் கண்டுப்பிடிப்பு 2022
கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகம், காடம்பாறை பிரிவு, அப்பர் ஆழியார் சரகப் பகுதியில், நேற்றைக்கு முன்தினம் காடம்பாறை பிரிவு வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் ரோந்துப் பணி மேற்கொண்டு முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அப்பர் ஆழியார் பள்ளம் என்ற பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ தேஜா உத்திரவின்படி, இறந்த பெண் காட்டு யானைக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், வனப்பாதுகாவலர், இயற்கை ஆர்வலர்கள் முன்னிலையில் மருத்துவ குழுவினர் இறந்த பெண் காட்டு யானையின் உடலினை உடற்கூராய்வு செய்தனர்.
உடற்கூராய்வின் போது இறந்த யானைக்கு சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் எனவும், ஆண் காட்டு யானையுடன் சண்டையிட்டு , ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டதன் காரணமாக பெண் காட்டு யானை இறந்துள்ளது எனவும் பிரேதப் பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. பின்னர் இறந்த பெண் காட்டு யானை பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது
Discussion about this post