நியூசிலாந்தில் 102 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் நிம்மதியாக இருந்த நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லந்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஆக்லந்தில் இன்று முதல் மூன்றாம் நிலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெசிண்டா ஆர்டர்ன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த சூழலில் தேர்தல் குறித்து முடிவெடுப்பது சரியல்ல. எனினும், தேவைப்பட்டால் தேர்தல் தேதியில் மாற்றம் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் ஜுடித் கோலின்ஸ், “தேர்தலை நவம்பர் மாதத்திலோ, அடுத்த ஆண்டிலோ நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ய போதிய காலம் இல்லாதபோது நியாயமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post