திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னணி பாடகராக உலா வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருந்து வருகிறது.
செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி பூரண குணமடைய வேண்டி ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளனர். தம்முடைய 100க்கும் மேற்பட்ட டூயட் பாடல்களை ஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளதை நினைவு கூர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் சிவக்குமார், தொடர்ந்து பாடல்கள் பல பாடும் வகையில் எஸ்.பி.பி. குணம் பெற்று திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
தன்னுடைய திரையுலக பயணம் தொடங்குவதற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆற்றிய உதவிகளை நினைவுகூர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா, எஸ்.பி.பி நிச்சயம் குணம் பெற்று வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அபாயக் கட்டத்திலேயே உள்ள நிலையில் அவர் பூரண நலம் பெற வேண்டி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளனர்.
Discussion about this post