தமிழக வீரர்களுக்கு விருதுகள், சரத் கமலுக்கு கேல் ரத்னா, பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது 2022.
சென்னை :
பாராலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவும் அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
நாட்டில் விளையாட்டுத் துறைக்கான உயரிய விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரரான பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய விளையாட்டு அமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
Discussion about this post