news.திராவிடன்
Advertisement
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
news.திராவிடன்
No Result
View All Result
Home பயனுள்ள பொழுதுபோக்கு இன்றைய தேடல்

நீங்கள் உலகம் சுற்றுபவரா இந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

மூணார்- பரந்துகிடக்கும் சொர்கசோலைகளின் எழில்!

மாறா கார்த்திக் by மாறா கார்த்திக்
November 14, 2022
in இன்றைய தேடல், பயனுள்ள பொழுதுபோக்கு, பொது அறிவு
23 0
0
Munnar_hillstation
11
SHARES
52
VIEWS
WhatsappFacebook

மூணார் :

இந்தியாவில் – அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்’ கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது. மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும்.

mathurapuzha மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் (MathurapuzhaRiver, NallaThanni River, Kundali) மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது. கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஓய்வையும், இயற்கையின் அரவணைப்பையும் நாடி லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா மட்டும் தூரதேசங்களிலிருந்து மூணார் சுற்றுலாப்பிரதேசத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

Munnarபுத்துணர்ச்சியூட்டும் எழில் பூமி காலனிய காலத்திய மற்றும் கடந்த நூற்றாண்டுக்குரிய நவீன வரலாற்று பின்னணியை மூணார் பிரதேசம் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து பசுமை சமவெளிகளை நினைவூட்டும் இந்த மலைப்பிரதேச அழகு ஆங்கிலேயர்களுக்கும் வந்த நாளிலேயே பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் விரும்பிய இயற்கையின் தூய்மையும் இனிமையான சூழலும் இங்கு விரவியிருந்தது. எனவே அவர்கள் படிப்படியாக இப்பிரதேசத்தை தென்னிந்தியாவை ஆண்ட (ஆங்கிலேய) அதிகார வர்க்கத்துக்கான ஒரு கோடை விடுமுறை வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டனர். அந்த துவக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று மூணார் பிரதேசமானது தனது பிரமிக்க வைக்கும் எழிற்காட்சிகளுடன் கூடிய ஒரு பிரசித்தமான விடுமுறை சுற்றுலா ஸ்தலமாகவே மாறிவிட்டது.

ஒரு இயற்கை ரசிகர் எதிர்பார்க்கும் யாவற்றையுமே தன்னுள் கொண்டிருப்பது இந்த மூணார் ஸ்தலத்தின் விசேஷமாகும். கொஞ்சமும் இடைவெளியின்றி நீண்டு பரந்து காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களும், பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், பலவகை தாவர உயிரின வகைகளும், காட்டுயிர் சரணாலயங்களும், நறுமணம் நிரம்பிய காற்றும் இனிமையான குளுமையான சூழலும் இங்கு பயணிகளை வரவேற்கின்றன. கண்களை திறந்தாலே போதும் காணுமிடமெங்கும் இயற்கையின் வண்ணக்கோலம்! ஒரு உற்சாகமூட்டும் குளுமையான சூழலில் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த ஸ்தலம் இருக்க முடியாது. மலைப்பாதை சைக்கிள் பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற பாதைகள் இங்கு ஏராளம் உள்ளன.

munar1    வெல்வெட் மெத்தைகள் போன்று பரந்து விரிந்துள்ள தேயிலைத்தோட்டங்கள் வழியே இங்கு பயணிகள் ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பலவிதமான அரிய பறவைகள் வசிப்பதால் இப்பகுதி பறவை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சியளிக்கும் மூணார் ஸ்தலமானது குடும்பச்சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குதூகலம் விரும்பும் குழந்தைகள், தேனிலவுப்பயணம் நாடும் தம்பதிகள், புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப்பயணிகள் மற்றும் தனிமை விரும்பும் ஒற்றைப்பயணிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது. மலையேறிகள், சைக்கிள் பயணிகள் மற்றும் பிக்னிக் ரசிகர்களின் சொர்க்கம் மூணார் மலைவாசஸ்தலத்தின் முக்கிய விசேஷங்களில் ‘இரவிக்குளம் நேஷனல் பார்க்’ (Eravikulam National Par) எனப்படும் தேசிய இயற்கைப்பூங்காவும் ஒன்றாகும்.

eravikulam-national.இங்கு தமிழ்நாட்டின் அரசு விலங்கான ‘வரையாடு’ எனும் அரிய வகை ஆடு காணப்படுகிறது. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி’ இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம். இது தவிர, மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் ஒரு அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன. இந்த பால்பண்ணை இந்திய – ஸ்விஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும். மூணார் பகுதியில் ரம்மியமான இயற்கைச்சூழலின் பின்னணியில் அமைந்துள்ள நீர்விழ்ச்சிகளும் காணப்படுகின்றன.

 power-houseபள்ளிவாசல் நீர்வீழ்ச்சி, பவர்ஹவுஸ் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிற சின்னக்கனல் நீர்வீழ்ச்சி ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியமான அவசியம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகளாகும். ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் என்பது மற்றொரு முக்கியமான பார்த்து ரசிக்கவேண்டிய ஸ்தலமாகும். இங்குள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை அருங்காட்சியகத்தில் இப்பகுதியின் தேயிலைத்தயாரிப்பு மற்றும் வரலாற்று தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொத்தன்மேடு, ஆட்டுக்கல், ராஜமலா, எக்கோ பாயிண்ட், மீனுளி மற்றும் நாடுகாணி போன்ற இடங்களும் மூணார் பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.

kundali-river.    மூணார் மலைப்பகுதி உற்சாகமூட்டும் பருவநிலையுடன் எந்த நாளிலும் விஜயம் செய்ய ஏற்றவாறு காணப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மிக எளிதாக இங்கு பயணம் மேற்கொள்ளலாம். எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் மூணார் மலைவாசஸ்தலம் வருவதற்கு ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகள் கிடைக்கின்றன. ஹோட்டல்கள், ரிசார்ட் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் தங்களுக்கு பொருத்தமானவற்றை பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

 

Tags: Eravikulam National ParkIndiaKerala ViewKeralamKundaliMadhurapuzhaMunaarNature PlacesTamilnaduTourist PlaceTravelors
Previous Post

பங்குச் சந்தையில் IRCON International Ltd நிறுவனத்தின் பங்கு ட்ரெண்டிங்

Next Post

சென்னையை பற்றி அறிந்திராத வரலாற்று உண்மைகள்!

Related Posts

vande-bharath
உள்ளூர் செய்திகள்

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

by மாறா கார்த்திக்
January 18, 2023
34
fishers
உள்ளூர் செய்திகள்

நடுக்கடலில் உடைந்த படகு, இளநீரால் உயிர் பிழைத்த மீனவர்கள்!

by மாறா கார்த்திக்
January 9, 2023
35
railways
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு எச்சரிக்கை!

by மாறா கார்த்திக்
January 7, 2023
34
eclipse
விண்வெளி

சந்திரன், சூரியன் 7 நிமிடங்கள் இருளாகும்!

by மாறா கார்த்திக்
January 4, 2023
36
fest
உள்ளூர் செய்திகள்

கோயில் திருவிழாவின்போது மோதிக்கொண்ட யானைகள்!

by மாறா கார்த்திக்
December 29, 2022
34
Next Post
goarge-temple

சென்னையை பற்றி அறிந்திராத வரலாற்று உண்மைகள்!

Discussion about this post

Premium Content

வசந்தகுமார் எம்.பி மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

வசந்தகுமார் எம்.பி மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

August 28, 2020
40
பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாள்…

பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாள்…

September 17, 2020
145
Zoom-App-Hacked

சமீபத்தில் Hack செய்யப்படும் ஜூம்(ZOOM) Application!

September 20, 2022
42
UP TTE

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது !

January 23, 2023
34
ration

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்!

January 20, 2023
34
Word_Tamil

நமக்கு தெரியாத மொழியின் அர்த்தங்கள்!

January 20, 2023
38
A,R,FilmCity

ஏஆர் ரஹ்மான் பிலிம் சிட்டியில் விபத்து!

January 18, 2023
34
vande-bharath

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

January 18, 2023
34
muslim

15 வயதைக் கடந்த இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா?

January 14, 2023
34
Facebook
news.திராவிடன்

தமிழ் தாழ் திறப்போம், ஓர் புதிய கண்ணோட்டத்தில்

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00

Queue

Update Required Flash plugin
-
00:00
00:00