இன்று பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் ஆரம்பித்துள்ளன. அதற்கு முக்கிய காரணம் சமீபத்தநிறுவனங்கள் ஈட்டிய நிகர லாபமே. இன்று பங்குச் சந்தை உயர்வுடன் காணப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் IRCON International Ltd பங்கின் விலையானது பங்கு வர்த்தக அமர்வின் ஆரம்ப மணிநேரங்களில் 7% க்கு மேல் உயர்ந்ததால் இன்று ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.
அதுமட்டுமின்றி பங்குச் சந்தையில் அதன் போட்டியாளர் நிறுவனங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டு அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. இப்பங்கானது அதன் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை அளித்து இன்று பிரேக்-அவுட் ஸடாக்காகவும் ஜொலிக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக, தினசரி தொழில்நுட்ப அட்டவணையில் பங்கு ஒரு வலுவான விலை அளவைப் பதிவு செய்துள்ளது. திங்கட்கிழமை வர்த்தக அமர்வின் ஆரம்ப மணிநேரத்தில் 1.5 கோடி பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. அதன் 14-நாள் RSI (72.94) அதன் முந்தைய ஸ்விங் உயர்வை விட அதிகமாக உள்ளது மற்றும் வலுவான வலிமையைக் காட்டுகிறது. அதன் OBVமேல்நோக்கி சுட்டிக்காட்டுகிறது மற்றும் நேர்மறை உறுதிப்படுத்தலை அளிக்கிறது.
இன்று இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையானது 7.01% உயர்ந்து ரூ.53.40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதன் விலை இனி வரும் இப்பங்கின் விலை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வளர்ச்சியைக் கண்காணிக்க வர்த்தகர்கள் இந்தப் பங்கை தங்கள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம் எனக் கூறியுள்ளனர்.
Discussion about this post