Love Today: லவ் டுடே படம் பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலினிடம் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கேட்ட விஷயம் வெளியாகியுள்ளது (14.11.2022).
கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் லவ் டுடே. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
மேலும் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு மற்றும் ரவீனா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களுடன் வசூலை வாரி குவித்து வருகிறது.
ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். லவ் டுடே படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் இப்படத்தை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து இப்படத்தை பார்த்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், பெற்றோருடன் சேர்ந்து லவ் டுடே படத்தை பார்த்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். படம் பார்த்து வெளியே வந்ததும் படம் நல்லாருக்கு உதயா என்று தனது அப்பாவான முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அம்மா சொன்னதுதான் காமெடியாக இருந்தது என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின் படம் சூப்பரா இருக்கே, இதே மாதிரி நாமளும் போனை மாத்திக்கலாமானு என்று துர்கா ஸ்டாலின் கேட்டதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட தானும் தனுது அப்பாவும் அய்யோ வேண்டவே வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post