பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த டாஸ்கில் தனலட்சுமி நியாயமான முறையில் வெற்றியை பெறவில்லை என கடுமையாக கண்டித்துள்ளார்…
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் தனலட்சுமி ஒரு டீமிலும் மற்றும் விக்ரமன் ஒரு டீம் ஓனராகவும் இருந்தனர். இந்த போட்டியிலும், ரிசல்ட்டிலும் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக பேசிய கமல், தனலட்சுமியை கண்டித்து அவரின் வெற்றியை பறித்து விக்ரமனிடம் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி, தனலெட்சுமி மற்றும் மைனா நந்தினி ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியிலிருந்து ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். அதனை தொடர்ந்து மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார் மற்றும் செரீனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் விஜே மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடந்த ஸ்வீட் டாஸ்கில் தனலட்சுமி அன் கோ டீம் ஜெயித்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்த வெற்றி குறித்து பிக்பாஸ் வீட்டில் பேசிய கமல், தனலட்சுமியை கடுமையாக கண்டித்தார். நியாயமான விஷயங்களுக்கு கண்ணீர் சிந்தினால் முதலில் துடைப்பவனாக நான் வருவேன். ஆனால் நேர்மையற்ற முறையில் செயல்பட்டு தவறு செய்து கண்ணீர் சிந்தினால் நான் கண்டுகொள்ள மாட்டேன் என்று கமல் காட்டமாக கூறினார். மேலும் அவரது வெற்றியை பறித்து விக்ரமனுக்கு கொடுத்தார்.
இதனால் தனலட்சுமி எதுவும் பேச முடியாமல் பாத்ரூம் சென்று கதறி அழுதுள்ளார். அப்போது ஆறுதல் கூறிய ஆயிஷாவிடம், என் பெயர் கெட்டுவிட்டது, என்னை வெளியில் அனுப்பிவிடுங்கள். எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்திவிட்டார். நான் யார் காசையும் திருடவில்லை. இது திருட்டு என ஏற்றுக்கொள்ள முடியாது’ என சொல்லி கதறினார். அவரை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.
Discussion about this post