அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறும் நாள் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் அறிவிப்பு முன்னனி வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதால் ரசிகர்கள் ஆர்வம். ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு தொடரை முன்னிட்டு தற்போது மினி-ஏலம் நடத்தப்பட உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் அனைத்தும் எந்த வீரர்களை வைத்து கொள்ளும் யாரை ஏலத்தில் விட உள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குழப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 23ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐபிஎல் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் விடுவிப்பு குறித்து வரும் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகள் அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் மின் ஏலம் குறித்த பரபரப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் தொற்றியுள்ளது.
அது மட்டும் இல்லாமல் அனைத்து அணிகளிலும் பல முன்னனி வீரர்களை கழற்றி முடிவு செய்துள்ள நிலையில் இந்த வருடம் ஐபிஎல் மினி ஏலம் மிக பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post