டெல்லி:
உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக 62 வயது நிரம்பிய டிஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற டிஒய் சந்திரசூட்டின் தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் நாட்டின் 16வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டவர் என்பதும், தந்தையின் தீர்ப்பையே அவர் மாற்றி அமைத்ததும் வரலாற்று நிகழ்வாக பதிவாகி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் யுயு லலித். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பரிந்துரை செய்யப்பட்டார். இந்த பரிந்துரையை யுயு லலித் செய்தார்.
அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
யார் இந்த சந்திரசூட்?
இந்நிலையில் தான் டிஒய் சந்திரசூட் யார்? அவர் கடந்து வந்த பாதை என்ன? வழங்கிய தீர்ப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்கள் வருமாறு: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள டிஒய் சந்திரசூட் 1959ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பிறந்தார். தற்போது இவருக்கு வயது 62 ஆகும். இவரது முழுப்பெயர் தனஞ்செய யஷ்வந்த் சந்திரசூட் என்பதாகும். இதனை சுருக்கி தான் டிஒய் சந்திரசூட் என அழைக்கப்படுகிறார். இன்லாக்ஸ் உதவித்தொகையுடன் இந்த படிப்பை முடித்தார். மேலும் ஹார்வர்டில் ஜோசப் ஹெச். பீல் விருது பெற்றார்.
2024 வரை பதவியில் இருப்பார் அதன்பிறகு இந்தியா திரும்பிய டிஒய் சந்திரசூட் உயர்நீதமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். 2000ல் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார் அதன்பிறகு 2016ல் உச்சநீதிமன்றத்துக்குள் நுழைந்தார். அதன்படி 2016ல் உச்சநீதிமன்ற நீதிபதியானார். பிறகு மூத்த நீதிபதியாக அங்கீகாரம் பெற்றார். 2021ல் இருந்து உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்ய பரிந்துரைக்கும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் தான் தற்போது யுயு லலித்துக்கு பிறகு 50வது உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இவர் 2 ஆண்டுகள் வரை இந்த பதவியில் தொடர உள்ளார். 2024 நவம்பர் மாதம் 10ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் செயல்பட உள்ளார்.
முக்கிய வழக்குகள் என்னென்ன?
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை இவர் வழங்கிய பெஞ்சில் இவர் இருந்தார். மேலும் ஒரே பாலின திருமணம் இயற்கைக்கு எதிரானது அல்ல எனவும், பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமை வழங்கல் உள்ளிட்ட தீர்ப்புகள் வழங்கியதிலும் இவரது பங்கு இருந்தது.
தந்தை வழியில்!
டிஒய் சந்திரசூட்டின் தந்தை பெயர் Supreme Court . இவர் உச்சநீதிமன்றத்தின் 16வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளார். இந்நிலையில் தான் தந்தை யஷ்வந்த விஷ்ணு சந்திரசூட் பாணியில் மகன் டிஒய் சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இது மிகவும் சிறப்பு வாய்ந்த வரலாறாக மாறியுள்ளது. ஏனென்றால் தந்தைக்கு பிறகு மகன் ஒருவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வருவது என்பது முதல் முறையாகும்.
தந்தை தீர்ப்பு மாற்றினார் மேலும் டிஒய் சந்திரசூட், தனது தந்தையின் தீர்ப்புகளில் முரண்பட்டுள்ளார். மேலும் தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் வழங்கிய தீர்ப்பையே மாற்றம் செய்துள்ளார். அதாவது இந்திய தண்டனை சட்டம் 497 என்பது முன்காலத்தில் மிகவும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது திருமணமான ஆண், பெண் மற்றொருவரிடம் திருமணத்தை கடந்து உறவு வைத்து கொண்டால் அதில் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கும் வகையில் அந்தச் சட்டம் இருந்தது.
என்ன மாற்றம்?
இதனை 1985ம் ஆண்டு தலைமை நீதிபதியாக இருந்த தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் விசாரித்தார். அப்போது இதில் தவறு இல்லை எனக்கூறி அந்த சட்டப்பிரிவை தொடர செய்தார். இதனை சமீபத்தில் டிஒய் சந்திரசூட் மாற்றினார். தவறு செய்தால் இருவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டுமு். ஒருவருக்கு மட்டும் தண்டனை கொடுப்பது என்பது தவறானது. இது அரசியலமைப்புக்கு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி அந்த சட்டத்தை நீக்க செய்தார். ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பை டிஒய் சந்திரசூட் வழங்கி தந்தை யஷ்வந்த விஷ்ணு சந்திரசூட்டின் தீர்ப்பையே மாற்றி வியக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post