சென்னை:
சென்னையில் இன்று அரும்பாக்கம், நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இன்ற நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரும்பாக்கம் மார்க்கெட், சேமத்தம்மன் நகர், மேட்டுக்குளம், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், புவனேஸ்வரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். திருவெள்ளவாயல், காட்டூர், கல்பாக்கம், வொயலூர், மேரட்டூர், நெய்தவயல், கணியம்பாக்கம், வெள்ளம்பாக்கம், கடப்பாக்கம், செங்கழநீர்மேடு, ஊரணம்பேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும். முன்னதாக பணிகள் முடிவடைந்தால், மதியம் 2 மணிக்குள் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post