ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் ஜம்பி பிராந்தியத்தில் வெளியே சென்ற பெண்ணுக்கு நடந்துள்ள ஒரு சம்பவம் அங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெற்காசியா நாடுகளில் உள்ள முக்கியமான தீவு நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. அதிகளவில் எரிமலைகள் இருக்கும் பிராந்தியங்களில் இந்தோனேசியாவும் ஒன்றாகும்.
அதேபோல அங்கு பல்வேறு வகையான வன விலங்குகளும் உள்ளன. குறிப்பாகப் பாம்புகளில் நாகம் தொடங்கிப் பல வகையான விஷ பாம்புகள் உள்ளன.
இந்தோனேசியா.
உலகின் அனைத்து நாடுகள் எதிர்கொள்வதைப் போலவே இந்தோனேஷாயிவிலும் கூட மனித மிருக மோதல்கள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் இந்தோனேஷாசியாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மாயம் :
இதையடுத்து இது தொடர்பாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மாயமான அந்த பெண்ணை தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றது. முதல் நாள் தேடுதல் வேட்டையில் அந்த பெண் கண்டுபிடிக்கப்படவில்லை. மறுநாள் அந்த பெண் வேலைக்குச் சென்ற இடத்தில் ஒரு மிகப் பெரிய மலைப் பாம்பைப் பார்த்து உள்ளனர்.
அசையாமல் இருந்த பாம்பு :
அந்த பாம்பின் வயிறு வழக்கத்தை விட மிகப் பெரிதாக இருந்துள்ளது. பொதுவாகப் பாம்பு எதாவது இரையை விழுங்கினால் தான் அதன் வயிறு பெரிதாக இருக்கும். ஆனால், அதையும் தாண்டி இந்த பாம்பின் வயிறு மிகப் பெரியதாக இருந்தாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உள்ளூர் மக்கள் அந்த பாம்பைக் கொன்று, அதன் வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர். உள்ளே அந்த பெண் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பெண் உடல் :
அதாவது அந்த பெண்ணை அந்த பாம்புக் கொன்று அப்படியே விழுங்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து உள்ளனர். ஜம்பி மாகாண போலீசாரும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்து உள்ளனர். போலீசார் மேலும் கூறுகையில், ‘அந்த பெண்ணின் உடல் வயிற்றில் இருந்தது. அவரது உடல் அப்படியே தான் இருந்தது. அந்த பெண்ணின் உடைகளும் கருவிகளும் அங்குக் கிடப்பதை உயிரிழந்த பெண்ணின் கணவர் பார்த்து உள்ளார். அதன் பின்னரே அருகே பாம்பு இருந்ததைக் கண்டுபிடித்தோம்’ என்றார்
22 அடி மலைப் பாம்பு :
இந்த மலைப் பாம்பு சுமார் 20 முதல் 22 அடி வரை நீளமானதாக இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். மனிதர்களை மலைப் பாம்புகள் விழுங்குவது என்பது மிகவும் அரிதினிலும் அரிதான ஒன்றாகும். இருந்த போதிலும், இப்படி நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, இந்தோனேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் இரு முறை நடந்துள்ளன . கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் இருவரைப் பாம்பு உயிரிருடன் விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது
மலைப்பாம்புகள் :
மலைப்பாம்புகள் பொதுவாக தங்கள் உணவை அப்படியே முழுவதுமாக விழுங்கும். அதன் தாடைகள் நெகிழ்வான தசைநார்களை கொண்டுள்ளதால் எளிதாக அது விழுங்கும். பொதுவாக இவை எலிகள் உள்ளிட்ட சிறிய விலங்களைத் தான் விழுங்கும். அதேநேரம் அதிக கலோரிக்கள் தேவை என்றால் பன்றிகள் அல்லது பசுக்கள் போன்ற பெரிய விலங்குகளையும் மலைப்பாம்பு தனது உணவாகச் சாப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post