தனியார் நிறுவனங்களுடன் விடாப்பிடியில் போட்டிப்போட்டு வருகிறது BSNL நிறுவனம். அனைவருக்கும் விரைவில் 5ஜி என்ற முழக்கத்துக்கு நடுவில் விரைவில் நாடு முழுவதும் 4ஜி என்ற கோஷத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் நடக்கும் போட்டிகள் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இதை கவனிப்போம்.
அந்த இரண்டு திட்டங்களின் விலை என்ன? நீக்கப்படும் இரண்டு திட்டங்களில் ஒன்றின் விலை ரூ.275 ஆகும். அடுத்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை என்னவென்று கேட்டால், அதன் விலையும் அதேதான். அதாவது இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் ஒரே விலையில் சிறிய அளவிலான வித்தியாசமான பலன்களைக் கொண்டிருக்கிறது. ஒரு திட்டம் 30 Mbps வேகத்தில் 3300GB வரை டேட்டாவை வழங்குகிறது, மற்றொன்று 3300GB வரையிலான டேட்டாவுடன் 60 Mbpsஐ வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 2 எம்பிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும். இரண்டு திட்டங்களிலும் குரல் அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் இது பிராட்பேண்ட் திட்டம் என்பதால் வாய்ஸ் காலிங் கருவிக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 2 திட்டங்களும் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும். இரண்டு திட்டங்களிலும் உள்ள வித்தியாசம் 30 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 60 எம்பிபிஎஸ் வேகம் மட்டுமே ஆகும்.
உடனே இதை ரீசார்ஜ் செய்வது நல்லது இந்த இரண்டு திட்டங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ரீசார்ஜ் திட்டத்தை நவம்பர் 15 முதல் நிறுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டங்களில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால் உடனே இதை ரீசார்ஜ் செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் மட்டும் விதிவிலக்க அல்ல பிஎஸ்என்எல் இன் 4ஜி சேவைக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சமீபத்தில் அறிமுகமான ஜியோ, அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறது. இதில் பிஎஸ்என்எல் மட்டும் விதிவிலக்க அல்ல.
லேண்ட்லைன் சேவையில் முதல் இடம் குறிப்பாக ஜியோ நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தான் லேண்ட்லைன் வசதியை அறிமுகம் செய்தது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக லேண்ட்லைன் சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையில் பின்தங்கி இருந்தாலும் கூட லேண்ட்லைன் சேவையில் முதல் இடம் வகித்து வந்தது.
லேண்ட்லைன் சேவையில் பிஎஸ்என்எல் இந்நிலையில் 22 ஆண்டுகளாக லேண்ட்லைன் சேவையை வழங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை 3 ஆண்டுகளுக்கு முன் லேண்ட்லைன் சேவையை தொடங்கிய ஜியோ பின்னுக்கு தள்ளி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லேண்ட்லைன் சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஜியோ முதல் இடத்தை பிடித்துள்ளது.
சந்தாதாரர்கள் எண்ணிக்கை என்ன? கடந்த ஆக்ஸ்ட் மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 2.59 கோடி பேர் லேண்ட்லைன் சேவையை பெற்றுள்ளனர். மேலும் ஜியோ நிறுவனம் 73.4 லட்சம் சந்தாதாரர்களையும், பிஎஸ்என்எல் நிறுவனம் 71.3 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் 62 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டு 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் 15,000 லேண்ட்லைன் சந்தாதாரர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னடைவை சந்திக்கும் டெலிகாம் நிறுவனம் அதேசமயம் ஜியோ நிறுவனம் 2.62 லட்ச சந்தாதாரர்களையும், ஏர்டெல் நிறுவனம் 1.19 லட்ச சந்தாதாரர்களையும் புதிதாக பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வீடுகள், அலுவலகம் என அனைத்திலும் பிஎஸ்என்எல் இணைப்பு இருந்த காலம் மாறி 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்பு பிஎஸ்என்எல் அதிக பின்னடைவை சந்தித்து வருகிறது என்பது தான் உண்மை.
Discussion about this post