ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் 15 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும், கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் வரை அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் 15 நாட்கள் தொடர் தடையை நீடித்தது.
Discussion about this post