பொம்மை டாஸ்கின்போது ஷெரினா, நிவாஷினியை பிடித்து தள்ளிவிட்டதாகக் கூறி தனலட்சுமியை விளாசியுள்ளார் அசீம்.
பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின்போது சீரியஸான தனலட்சுமியை அசீம் திட்டியிருக்கிறார்.
பொம்மை டாஸ்க் கொடுத்து ஹவுஸ்மேட்ஸ் இடையே சண்டை வரக் காரணமாக இருக்கிறார்
பிக் பாஸ். இந்நிலையில் டாஸ்கின்போது சக போட்டியாளர்களை பிடித்து தள்ளிவிட்டதாகக் கூறி தனலட்சுமியை அசீம் திட்டிய ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.
ஏன் இப்படி தள்ளிவிடுற, ரொம்ப வயலன்டாக விளையாடுற. ஒரு பொண்ணு தான நீயும். அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை. அப்படி புடுச்சு தள்ளிவிடுற நிவாஷினியையும், ஷெரினாவையும் என்று திட்டினார் அசீம். பதிலுக்கு முறைத்தார் தனலட்சுமி.
தனலட்சுமி ஒன்னும் தள்ளிவிடல. அவரும் தான் கீழே விழுந்தார். தள்ளிவிட்டது ஜனனியும், ராமும் என்று சிலரும், தனலட்சுமி தான் தள்ளிவிட்டது என்று சிலரும் தெரிவித்துள்ளனர்.
குறும்படம் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனலட்சுமி யாரையும் தள்ளிவிடவில்லை. யாரோ செய்த விஷயத்திற்கு தனலட்சுமியை தான் திட்டுவாரா ஆசீம். தனலட்சுமியை வைத்து ஸ்கோர் பண்ண பார்க்கிறார் அசீம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
Discussion about this post