சாக்ஷி தோனி:
“நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் செய்ததை மக்கள் மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்“ என்று மாயா ஏஞ்சலோவின் வரிகளை பதிவுசெய்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி :
அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், “நாட்டிற்காக 3 விதமான கோப்பைகளை பெற்று தந்த கேப்டன் கூல் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியர்க்கும் பெருமை சேர்ப்பதாகும்“ என்றுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
“மஹேந்திர சிங் தோனியின் பின்வாங்காத கடின உழைப்பும், கிரிக்கெட்டைக் குறித்த ஆழமான நுண்ணறிவும் இந்திய கிரிக்கெட்டை பெரிய உச்சிக்கு கொண்டு சென்றது. அவருடைய நிதானம், மோசமான சூழ்நிலைகளையும் இந்திய நாட்டுக்கு சாதகமானதாக மாற்றியது. அவர் மக்களின் மனதில் எப்போதும் நிலைத்திருப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின்:
“கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி:
ஒரு விக்கெட் கீப்பராக அவர் அசாத்தியமானவர், மிகவும் திறமையாக செயல்படக் கூடியவர். அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். என்னை பொறுத்தவரை அவர் ஸ்டெம்பிங் மற்றும் ரன்அவுட் செய்யும் ஒரு சிறந்த பிக்பாக்கெட் அடிப்பவரை விட அவரது கைகள் வேகமாக செயல்படும். அவர் பெயல்ஸை வீழ்த்தி இருப்பதை பேட்ஸ்மேன் கூட உணர்ந்திருக்க கூட மாட்டார்“ என்றார்.
சுப்ரமணியன் சுவாமி:
சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தோனி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்றுள்ளார். அதை தவிர வேறு ஏதுலிருந்தும் அல்ல. அவர் தடைகளை எதிரத்து போராடக்கூடிய நபர். கிரிக்கெட்டில் ஒரு அணியை திறன்பட வழிநடத்திய அவரது திறமை பொது வாழ்விற்கும் வேண்டும். தோனி 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும்“ என்றுள்ளார்.
Discussion about this post