நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில், மின்வாரிய அதிகாரிகளையே விசாரிக்க வேண்டியுள்ளதால் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
அடுத்த மாதம் முதல் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு முதலமைச்சர் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து அது தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். வரக்கூறிய மாதங்களில் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இத்திட்டம் தொடங்கும் என தெரிவித்தார்.
பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நிலக்கரி காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் டன் நிலக்கரி கடந்த ஆட்சி காலத்தில் காணாமல் போய் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம்.
Discussion about this post