மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளது.
பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நிலக்கரி காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் டன் நிலக்கரி கடந்த ஆட்சி காலத்தில் காணாமல் போய் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம்.
அதன் அடிப்படையில் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்’ என கூறினார். லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்க காரணம் குறித்த கேள்விக்கு, ‘மின்வாரியத்தில் உள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளதால் எனவே மின் வாரியத்திலேயே புகார் அளிப்பது சரியாக இருக்காது. எனவே லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என விளக்கம் அளித்தார்.
Discussion about this post