நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரண்டு லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரதமர் முடிவு செய்துள்ளதாக வெளியாக உள்ள தகவல் பிரிட்டன் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா காலத்தில் இகுந்தே அங்கு இந்த தொடர்ந்து கொண்டிருக்கிறது. சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அண்மையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில் முக்கியமாக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை பணி நீககம் செய்ய பிரிட்டன் ம பிரதமர் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்குமானால், அடுத்த ஆண்டும் மேலும் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு இருக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் செலவினங்களை குறைத்து ஐந்து பில்லியன் பவுண்ட்கள் வரை சேமிக்கும் நோக்கில் பிரதமர் லிஸ் பிரஸ் இந்த அதிரடி முடிவை எடுக்க உள்ளாராம்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இரண்டு லட்சம் பேரை பணி நீக்கம் செய்ய பிரதமர் லிஸ் டிரஸ் முடிவு செய்துள்ள தகவலால் அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post