மேஷ ராசி நண்பர்களே!மேஷம்:
இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமைகிறது. வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கலாம். இது பல நாட்களாக தொடர்பில் இல்லாத உறவினர் மற்றும் நண்பர்களைச் சந்திக்க ஏற்படும் ஒரு அரிய வாய்ப்பாகும். நீங்கள் அவர்களுடைய செல்போன் நம்பரை அல்லது ஈ மெயில் முகவரியை மறக்காது வாங்கிக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிதான விஷயங்களைச் சேர்க்க நல்ல நாளாகும். நீங்கள் ஆர்வத்தின் உச்சியில் இருக்கிறீர்கள். அதனால் எந்தவொரு திட்டத்தையும் ஆதரிப்பீர்கள். உங்கள் உடல் நலத்தையும், நிதி நிலவரத்தையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.
ரிஷப ராசி நண்பர்களே!ரிஷபம்:
இன்றைய நாள் உங்களுக்குக் குழப்பமான நாளாக அமைகிறது. நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறலாம். அது எதுவாக இருந்தாலும் உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் மனக் கசப்பைத் தரும். குடும்பத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் மனக்கவலையில் இருப்பீர்கள். நீங்கள் குடும்பத்தாரிடமிருந்து அதிகமான ஒத்துழைப்பை எதிர்பார்த்திருப்பீர்கள். இந்தக் காதலை அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லையா. இது உங்களுக்கு நல்லதுதானா என சிந்தித்துப் பாருங்கள். இது உங்கள் வேலையை பாதிக்கலாம்.
மிதுன ராசி நண்பர்களே!மிதுனம்:
இன்றைய நாள் உங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக அமைகிறது. கடினமாக உழைத்தால் முயற்சி செய்தால் பெரிய அளவில் இலாபத்தைப் பெறும் நாளாகும். நற்பேரினால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். அனைத்து வழிகளிலிருந்தும் இலாபம் பொழியலாம். பார்ட்னர்களும் முதலாளிகளும் புகழும் போது கவனத்துடன் இருக்க வேண்டும், புகழ்ச்சிக்கு மயங்கக் கூடாது. எதிர் பார்த்துக்கொண்டிருந்த காரியம் நல்ல படியாக நடப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒரு பெண்ணைச் சந்தித்தால் அழகாக புன்னகை செய்து அவளுடன் பழகவும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்குப் பிடித்தவரிடமிருந்து இன்று ஒரு நல்ல செய்தி கிடைக்கலாம்.
கடக ராசி நண்பர்களே!கடகம்
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் உங்களுக்குத் தடங்கல் எதுவும் ஏற்படாது. இன்று உங்களுக்குச் சுலபமாக இலாபங்கள் கிடைக்கும். கடினமாக உழைத்ததின் பலன் விரைவாகக் கிடைப்பதால் மன அமைதி கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையால் மகிழ்ச்சி அடைவார்கள். இன்று உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். அலுவலகத்தில் செய்யும் ஆலோசனைகள் உங்களுக்கு நல்ல பலன் தரும். உங்களுடைய வீடு அல்லது அலுவலகத்தை அழங்கரிக்கவும் புதுப்பிக்கவும் யோசிப்பீர்கள். இன்று உங்களின் குடும்பச் செலவுகள் அதிகரிக்கலாம் ஆனால் கவலைப் பட வேண்டாம். உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கும். வெளியூர் பயணத்தால் இலாபம் கிடைக்கலாம்.
சிம்ம ராசி நண்பர்களே!சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதாரணமான நாளாக அமைகிறது. இன்று உங்களது வேலைகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். ஏற்றுக் கொண்ட எல்லா வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் முயற்சியினால் அட்டவணை ஆலோசனைகள் நன்றாக முடியும். நீங்கள் எல்லா சூழ்நிலையையும் பொறுமையாகவும் முன்யோசனையுடனும் கையாளுவீர்கள். புனித யாத்திரைக்குச் செல்லலாம். உங்கள் உறவினர் குழந்தையின் படிப்பும் உடல் நலமும் உங்களுக்குக் கவலையைத் தரலாம். நீங்கள் இன்று கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இயந்திரம் போல் வேலை செய்வதைத் தவிர்த்து கொஞ்சம் ஓய்வெடுப்பது நல்லது.
கன்னி ராசி நண்பர்களே!கன்னி:
இன்றைய நாள் உங்களுக்குப் புதுமையான நாளாக அமைகிறது. இன்று வாழ்க்கையின் பல்வேறு அம்சத்தில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் உடல் நலத்திலும் உணவுபழக்கவழக்கத்திலும் கவனம் தேவை. எல்லாவற்றிர்க்கும் மேலாக தூய்மையில் எச்சரிக்கைத் தேவை. வெளியே உணவு உண்பதைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் தண்ணீரிடம் இருந்து விலகி இருக்கவும். இன்று நீங்கள் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். தனிபட்ட விஷயங்கள் பெரிதாக பாதிக்கப்படலாம். அது உங்கள் மனதைக் காயப்படுத்த வாய்ப்புள்ளது. புரட்சிகரமான திட்டங்களிலும் வழி மாற்றம் செய்யும் திட்டங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது.
துலா ராசி நண்பர்களே!துலாம்:
இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமைகிறது. பல விதமான கலாச்சார விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படும். பழைய நண்பர்களைச் சந்திப்பது உங்களுக்கு ஊக்கம் மற்றும் உற்சாகமூட்டும். நீங்கள் இப்போது வெளியூர் பயணம் செய்வது நல்லது. இன்று புதிதாக ஆடைகள் வாங்குவீர்கள். நீங்கள் இன்று பிறரைக் கவரும் எண்ணத்துடன் இருக்கலாம். உங்களது காதலை வெளிப்படுத்த ஏற்ற நாளாகும். மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
விருச்சிக ராசி நண்பர்களே!விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்குச் செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமைகிறது. உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் ஆரோக்கியத்தை உணர்வீர்கள். இன்று உங்களின் ஆடம்பரத்தால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் நலமில்லாதவர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். உங்கள் விரோதிகள் எதிர்ப்பின்றி தோல்வியை ஏற்றுக் கொள்வார்கள். சக பணியாளர்களிடமும் ஒத்துழைப்பைக் காணலாம். உங்களுக்கு பண இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தனுசு ராசி நண்பர்களே!தனுசு:
இன்றைய நாள் உங்களுக்கு சோர்வான நாளாக அமைகிறது. இன்று உங்களுக்கு ஏற்படும் தோல்விகளால் தளர்வடைய வேண்டாம். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலைகளால் மன அமைதி பாதிக்கப்படலாம். இன்று நீங்கள் வெளியூர் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.
மகர ராசி நண்பர்களே!மகரம்:
இன்றைய நாள் உங்களுக்குச் சுபமான நாளாக அமைகிறது. இன்று நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் உங்களை இறுக்கமடையச் செய்யலாம். தூக்கமின்மையால் நீங்கள் சோர்வாக இருப்பீர்கள். தண்ணீரில் இறங்கும் போதும் பெண்களுடன் பழகும்போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இன்று பண நஷ்டம் ஏற்படலாம். உங்கள் நற்பெயரை பாதிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கக்கூடும்.
கும்ப ராசி நண்பர்களே!கும்பம்:
இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமைகிறது. உங்கள் நடவடிக்கையில் மகிழ்ச்சி தோன்றலாம். உங்களை சூழ்ந்து கொண்டிருந்த பிரச்சனைகள் இன்று விலகலாம். அதிர்ஷ்டங்கள் வந்து கொண்டிருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியை உணரலாம். குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள். சிறிய சுற்றுலாவிற்குச் செல்ல ஏற்பாடு செய்யலாம். நீங்கள் எதிரிகளை வெல்வதும் கொண்டாட்டத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
மீன ராசி நண்பர்களே!மீனம்:
இன்றைய நாள் நீங்கள் கவனமாக இருக்கும் நாளாகும். இன்றைக்கு மற்றவரோடு பேசுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் பேசும் எதுவும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ளப்படும். தவறாகப் புரிந்து கொண்டு விவாதம் செய்ய வாய்ப்புள்ளது. எந்த விதமான காரியங்களில் ஈடுபடும் போதும் கவனமாக இருக்கவும். உங்கள் செலவுகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கவும் வாங்கவும் கூடாது. நீங்கள் அறவே புறக்கணித்த உடல் நலப் பயிற்சியில் கவனம் செலுத்துவது நல்லது. இது உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சாப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
Discussion about this post