சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தோனி உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரெய்னா, ‘தோனி, உங்களுடன் இணைந்து விளையாடியது என்றுமே இனிமையாக இருந்ததே தவிர வேறெதுவும் இல்லை. என் இதயம் முழுக்க பெருமிதத்துடன், நானும் உங்களோடு இந்தப் பயணத்தில் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2005-ம் ஆண்டு அறிமுகமானர் சுரேஷ் ரெய்னா. இடது கை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் இந்திய ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 5615 ரன்கள் குவித்துள்ளார். அதில், ஐந்து சதமும், 36 அரை சதமும் அடங்கும். 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் கடைசியாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிவர் சுரேஷ் ரெய்னா.
ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் நம்பிக்கை வீரராக கலக்கிவருகிறார். தோனியை தல என்று அன்போடு அழைக்கும் தமிழக ரசிகர்கள், ரெய்னாவை சின்ன தல என்று அழைத்துவருகின்றனர். சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி ஓய்வை அறிவித்தநிலையில், சுரேஷ் ரெய்னாவும் அவருடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
Discussion about this post