இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்கு அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் என்ற பெருமையைக் கொண்டவர். இந்திய அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி அறிமுகமானர்.
2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரானப் போட்டியின் இறுதி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தபோது, அதுவரையிலான இந்திய அணியின் கேப்டன்கள் படைத்த அத்தனை சாதனைகளையும் முறியடித்திருந்தார்.
இறுதியாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார் தோனி. அதன்பிறகு, இந்திய அணியில் தோனிக்கு இடமளிக்கப்படவில்லை. அவர் ஓய்வில் இருந்துவந்தார். ஐ.பி.எல் தொடரில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலாக இருந்த நேரத்தில் கொரோனாவால் தொடர் தள்ளிப்போகியுள்ளது.
இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெற்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post