பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 132வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவம்பர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்சவிலையாக இருந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கலக்கம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கின.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் மே 22ஆம் தேதி முதல் பெட்ரோல் ரூ.8.22 மத்திய அரசு குறைத்தது.
இந்நிலையில், தொடர்ந்து 132-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில், பெட்ரோல் 102.63 ரூபாய், டீசல் 94.24 ரூபாய் என விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
Discussion about this post