மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கல்கியின் நாவலுக்கு இணையாக இருக்கிறதா என பார்க்கலாம்.
திரையுலகம் :
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவர்களின் உதவியுடன் மணிரத்னம் சாத்தியமாக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு பொன்னியின் செல்வன் நாவலை படத்தவர்களும், படிக்காதவர்களும் மிகுந்த எதிர்பார்த்து காத்திருந்தனர். கதை பலருக்கும் தெரியும் என்பதால் அதற்குள் அதிகம் செல்ல வேண்டாம்.
10-ம் நூற்றாண்டு கதை, சோழர்களின் ஆட்சி, நந்தினியின் சதி, பதவி ஆசை, பாண்டியர்களின் பழி வாங்கும் முயற்சி, கரிகாலனின் கொலையை நோக்கி உண்மையும், கற்பனையும் கலந்து கதையை எழுதியிருந்தார் கல்கி. அவரின் எழுத்துக்கும் படைபிற்கும் நியாம் சேர்க்கும் வகையிலேயே படத்தை கொடுக்க மணிரத்னம் முயற்சித்துள்ளார்.
இராஷ்டிரகூடர்கள் நாடு போரில் ஆதித்ய கரிகாலனின் வெற்றியை தொடர்ந்து, வந்தியத்தேவன் சோழ நாட்டை நோக்கி பயணிக்கும் இடத்தில் தொடங்கி, பொன்னியின் செல்வன் கடலில் மூழ்கும் சம்பவம் வரை முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளது.
கரிகாலனின் தகவலை வந்தியத்தேவன் சுந்தரச் சோழர், மற்றும் குந்தவையிடம் கூற வேண்டும். அதை சாமர்த்தியமாக செய்து முடிக்கவும், சோழ அரசுக்கு எதிராக நடக்கு சதியை தடுக்க அவன் முயற்சி வெற்றியடைய வேண்டும் என பார்பவர்கள் மனதில் தோன்ற வைக்கிறது வந்தியத் தேவன் பயணம்.
நாவலில் உள்ள சாரம்சத்தை திரையில் காட்டும் விதம் அழகு. பொன்னியின் செல்வன் அறிமுகம், கரிகாலன் கோபம், நந்தினியின் வஞ்சகம் என அனைத்தும் திரையில் நேர்த்தியாக பிரதிபலிக்கிறது.
இதில் நடித்துள்ள ஒவ்வொரு நடிர்களும் கல்கியின் கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளனர். அனைவரும் மிக கச்சிதமாக பாத்திரத்துடன் பொருந்தி பிரமிக்க வைக்கின்றனர். அந்த அளவிற்கு மணிரத்னம் மிக கவனமாக நடிகர்களை தேர்வு செய்து, நடிப்பை வாங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் உண்மையான கோட்டையிலே படமாக்கியுள்ளனர். கோட்டையின் வெளிபுறத்தோற்றமும், கடல் பயணத்திற்கும்தான் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை மணிரத்னம் சரியாக செய்துவிடுவாரா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் இருந்தது. அதை 70 சதவீதம் பூர்த்தி செய்துள்ளார். அதேபோல் இலங்கையாக காட்டப்படும் இடங்களும் அழகு நிறைந்ததாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியதில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் பங்கு மிக அதிகம். புத்தகத்தில் உள்ள விஷயங்களை படம் பிடிக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக்கொண்டு மிக சிறப்பான ஒளிப்பதிவை கொடுதுள்ளார்.
அதேபோல் நாவலில் இல்லாத ஒன்று இசை. அதை கதையோட்டத்துடன் கொடுக்க வேண்டிய பொருப்பு ஏ.ஆர்.ரஹ்மானிடம். அவரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலேயே இருக்கிறது. இருந்தாலும் இது போன்றுதான் அப்போது இசை இருந்ததா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. பாடல்களுன் கதையோட்டத்துடன் கடந்து சென்று விடுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் வசனம் முக்கியமானது. அதை ராஜா காலத்து வசனம் போல் இல்லாமல் இயல்பாகவே உள்ளது. அதற்காக மணிரத்னம் மற்றும் ஜெயமோகன் ஆகியோர் எடுத்த துணிச்சலான முடிவை பாராட்ட வேண்டும். அதேபோல் திரைக்கதையில் பங்காற்றியுள்ள குமரவேலின் பங்கும் முக்கியம்.
ஐந்து பாகங்களை கொண்ட புத்தகத்தை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக மாற்றுவது மிக சவால். இருந்தாலும் நாவலில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் அனைத்தையும் கட்சிப்படுத்தியுள்ளார் மணிரத்னம்.
சோழ மன்னர்களின் காலம் தற்போது அந்த நிலப்பரப்பை தற்போது படமாக்குவது கடினம். அதை சாமர்த்தியமாகவே படமாக்கியுள்ளனர்.
பொன்னியின் செல்வன் நாவலின் தொடக்கத்தில் வந்தியத்தேவன் வாயிலாக நாவல் கதை தொடங்கும். வீரநாராயண ஏரி கரையில் வந்தியத்தேவன் வருவதை கல்கி விவரித்ததை படிக்கும் போது கண்கள் முன் காட்சிகள் பிரமிப்புடன் விரியும். அந்த காட்சிகள் படத்தில் பாடல் மூலம் கடந்து செல்கிறது. அதேபோல் பெரிய பழுவேட்டரையர் அறிமுகம், வந்தியத் தேவன் சந்திக்கும் நபர்கள், சம்பவங்கள் உள்ளிட்டவை நாவல் படித்தவர்களுக்கு காட்சிகளாக மட்டுமே தெரிகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் கதை தெரியாதவர்களுக்கு நிச்சயம் சுவாரஸ்யத்தை கொடுக்கும்.
Discussion about this post