சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரின் வீட்டில் 10 அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி வைத்தார். அப்போது, கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது வெளியே ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவாளர்கள் வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ் என கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் வரும் 2021- ஆம் ஆண்டு அ.தி.மு.க சார்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கெனவே, தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ்தான் முதல்வராக வர வேண்டும் என பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பின்னர் அந்த நோட்டீஸ்கள் அகற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சலசலப்புடன் இருக்கும் அ.தி.மு.க.
Discussion about this post