ஒட்டாவா:
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாகிஸ்தான் எல்லை இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என கனடா அரசு அந்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து இருப்பதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் எச்சரிக்கை விடுத்து இருந்தது
இந்த நிலையில், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு குடிமக்களுக்க்கு அறிவுறுத்தியுள்ளது.
செல்ல வேண்டாம் கனடாவில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதேபோல், கனடா நாட்டு மக்களும், சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் எந்தெந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.. எங்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது குறித்து ஓவ்வொரு நாடும் தங்கள் வெளியுறவுத்துறை அமைச்சக இணையத்தில் அறிவுறுத்தல்களை பகிர்ந்து வருகிறது.
கனடா வெளியுறவு அமைச்சகம் அந்த வகையில், கனடா அரசு இணையத்தளத்தில் நேற்று (செப்டம்பர் 28) பயண அறிவுறுத்தல் ஒன்று அப்டேட் செய்யப்பட்டு இருந்தது. அதில், பாகிஸ்தானுடனான எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தை தவிர்க்க வேண்டும் :
அதேபொல், நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் இந்தியா செல்லும் கனடா மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல், பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிக்குழுக்கள் அபாயம் இருப்பதால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கும் அவசியமற்ற பயணத்தை தவிர்த்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த விழிப்புடன் முன்னதாக கடந்த 23 ஆம் தேதி கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில், கனடாவில் சமீப காலமாக வெற்று தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் மிகுந்த கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல், தூதரகங்களில் தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கண்ணிவெடிகள் இருக்கும் அபாயம்:
இந்த பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:-
கணிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு சூழல் நிலவுவதாலும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் இருக்கும் அபாயமும் இருப்பதால் பாகிஸ்தானுடனான எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லையை ஒட்டி 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்த்து விட வேண்டும்.
Discussion about this post