இந்தியாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, ஜனவரி 1, 2023 முதல் அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு கைபேசியின் IMEI எண்ணையும் விற்பனைக்கு முன், இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

போலி சாதன கட்டுப்பாடு (ICDR) அமைப்பு என்றால் என்ன?
போலி சாதன கட்டுப்பாடு என்பது ஜனவரி 1, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டில், பல்வேறு சுங்கத் துறைமுகங்கள் மூலம் மொபைல் சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான ‘IMEI சான்றிதழ்களை வழங்குவதற்காக’ இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு (ICDR) முறையை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது. தற்போது அதோடு சேர்த்து விற்பனைக்கு முன்னர் போர்ட்டலில் IMEI எண்களை பதிவு செய்யும் முறையும் சேர்ந்துள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
இந்தியாவின் மொபைல் ஸ்டாண்டர்ட் அலையன்ஸ் (MSAI) ஆல் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் பழைய IMEI– குளோனிங் மற்றும் டூப்ளிகேஷன் கட்டுப்பாடு முறைக்குப் பதிலாக புதிய அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இணைய போர்டல் மூலம் பதிவு மற்றும் IMEI சான்றிதழ் உருவாக்கும் செயல்முறைக்கு, எந்தவொரு முகவரையும் அல்லது மூன்றாம் தரப்பினரையும் அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.
கவனம்:
நீங்கள் எங்கிருந்து மொபைல் போன் அல்லது புதிய ஹெட்செட் வாங்கினாலும், சாதனத்தில் IMEI எண் உள்ளதா இல்லையா என்பதை எப்போதும் சரிபார்க்கவும். IMEI எண் இல்லாத எந்த சாதனமும் போலியானது. IMEI எண்ணைச் சரிபார்க்க, விவரங்களைப் பெற *#06# ஐ டயல் செய்யுங்கள். இரட்டை சிம் ஸ்மார்ட்போன்களுக்கு, இரண்டு தனித்துவமான IMEI எண்கள் இருக்கும்.
Discussion about this post