FIDO கூட்டணி 2012 முதல் உள்ளது, ஆனால் கடவுச்சொல் இல்லாத உள்நுழைவுகளில் கவனம் செலுத்துவது சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது.
ஒப்போ(OPPO) நிறுவனம் தற்போது கடவுச்சொல் இல்லாத உள்நுழைவு வசதி வழங்குவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடவுச்சொல்(Password) இல்லாத உள்நுழைவு என்பது வரும் ஆண்டுகளில் பல தொழிலநுட்ப உற்பத்தியாளர்களுக்கு பரபரப்பான விஷயமாக இருக்கும்.
டிஜிட்டல் உள்நுழைவுகள் நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது. அத்தனை டிஜிட்டல் கணக்குகளை வைத்துள்ளோம். அதனால் அத்தனை கணக்குகளின் கடவுச்சொற்களை நினைவில் வைத்திருப்பது சவாலாக உள்ளது. பாஸ்வோர்ட்களை மறந்துவிட்டால் அதை மீட்டமைப்பதே ஒரு பெரிய வேலையாக மாறிவிடும்.
பெருநிறுவனங்கள் இத்தகைய நடைமுறைகளை நிறுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றன. அமைப்பை மாற்றுவதற்கான மொத்த விருப்பமும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு சோதிக்கப்படுகிறது.
Discussion about this post