South Africa tour of India 2022 Tamil News:
இந்திய மண்ணில் சுற்றுப்பயணமாக வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி நாளை புதன்கிழமை இரவு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. தற்போது திருவனந்தபுரத்தை அடைந்துள்ள இரு அணிகளும், அங்குள்ள மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதனால் அதே உத்வேகத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாண்டியாவுக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல், முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா இந்த தொடரில் பங்கேற்ற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா vs தென் ஆப்ரிக்கா: போட்டி – முழு அட்டவணை
டி-20 போட்டிகள்:
செப்டம்பர் 28, 1வது டி20 – கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியம், திருவனந்தபுரம், இரவு 7.30 மணி IST
அக்டோபர் 2, 2வது டி20 – பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி, இரவு 7.30 மணி IST
அக்டோபர் 4, 3வது T20I – ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தூர், இரவு 7.30 IST
ஒருநாள் போட்டி:
அக்டோபர் 6, 1வது ஒருநாள் போட்டி – ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ, பிற்பகல் 1.30 IST
அக்டோபர் 9, 2வது ODI – JSCA சர்வதேச மைதான வளாகம், ராஞ்சி, மதியம் 1.30 IST
அக்டோபர் 11, 3வது ஒருநாள் போட்டி – அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி, மதியம் 1.30 IST
இந்தியா vs தென் ஆப்ரிக்கா: இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
இந்திய டி20 அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
தென் ஆப்பிரிக்கா டி20 அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ஸ்வைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜார்ன் ஃபோர்டுயின், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ
தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஜான்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ஆண்டிலி பெஹ்லுக்டோரி, ரௌல்கி ப்ரிவேயோஸ் தப்ரைஸ் ஷம்சி
இந்தியா vs தென் ஆப்ரிக்கா:
டெலிகாஸ்ட் மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள்
இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கும்.
டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பாகும்.
இணையதளத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்பில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்.
Discussion about this post