முதலில் NavIC ஆதரவு தேவைப்படும் ஃபோன்கள் உருவாக்க அதன் வன்பொருளில் ( hardware ) மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஸ்யோமி, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் போன்களை இந்தியாவின் உள்நாட்டு நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் ஆஃப் NavIC உடன் இணக்கமாக உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் விரும்புவதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
GPS-க்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் NavIC அமைப்புகளை சில நிறுவனங்களின் போன்களில் சேர்க்க வேண்டுகோள் விடுத்து வருகிறது. NavIC இந்தியாவிலேயே உருவாக்க படுவதால் இந்தியாவில் வழிசெலுத்தலுக்கு சிறந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
முதலில் NavIC ஆதரவு தேவைப்படும் ஃபோன்கள் உருவாக்க அதன் வன்பொருளில் ( hardware ) மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய புதிய மாற்றத்தால் போனின் விலையை சற்று உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GPS வசதியும் கிடைக்கும் என்றாலும் கூட, வன்பொருள் அமைப்பில் NavIC ஐ கட்டாயமாகச் சேர்ப்பது அரசாங்கத்தின் முன்மொழிவில் அடங்கும்.
இத்தகைய மாற்றங்கள் ஃபோன் தயாரிப்பாளர்களை தங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் திட்டங்களை முழுமையாக மறுசீரமைக்க கட்டாயப்படுத்தும். இந்த கோரிக்கை தொடர்பாக சாம்சங் மற்றும் சியோமி கடந்த மாதத்தில் அமைச்சகத்துடன் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது. ஜனவரி 1 ஆம் தேதிக்குள் இந்த மாற்றம் நிகழ வேண்டும் என்ற குறுகிய காலக்கெடுவை அரசு வைத்ததாகவும், போனின் செயலாக்க மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு ஃபோன் பிராண்டுகள் 2025 வரை கால அவகாசம் கோரியுள்ளன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது
புதிய வழி :
செயலி அமைப்பைச் சேர்ப்பது தொலைபேசி தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, அதற்கான சிப் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும். இது குறித்து நிறுவனங்களோ அல்லது இஸ்ரோவோ கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் தொழில்துறையின் நேவிகேஷன் டைனமிக்ஸை இவ்வளவு குறுகிய காலத்தில் மாற்றுவது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சாத்தியமாகாது. ராய்ட்டர்ஸ் கூறியுள்ள இந்த கூற்றுகளை அமைச்சகம் மறுத்துள்ளது மற்றும் எந்த நேரத்திலும் ஃபோன்களுக்கு NavIC ஐ கொண்டு வரும் திட்டம் இல்லை என்று கூறுகிறது.
Discussion about this post